1#17c. மிதிலை நகர்

கண்டார் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்.
கண்டார் கடை வீதிகள், பலவிதக் கடைகள்.

கண்டார் நடமாடும் சாதாரண ஜனங்களை;
கண்டார் வாதாடும் சாஸ்திர நிபுணர்களை.

நுழைய முயன்றார் இன்னொரு வாயிலில்;
நுழைவாயிலில் தடுத்தான் ஒரு காவலன்.

கஷ்டம் அடையவில்லை சுகர் இதனால்.
நிஷ்டையில் அமர்ந்தார் மரத்தின் நிழலில்

உபசரித்தான் அமைச்சன் அவரை உள்ளே
உத்யான வனத்துக்கு அழைத்துச் சென்று.

“முனிவரை உபசரியுங்கள்!’ எனக் கட்டளையிட
இனிய மங்கையர் கவனித்தனர் தேவைகளை.

அந்தப்புர மங்கையர் வந்தனர் ஒருநாள்
நந்த வனத்துக்கு உல்லாச மிகுதியோடு!

ஆயிரம் சந்திரனின் அற்புத காந்தியோடு
அமர்ந்திருந்த சுக முனிவரைக் கண்டனர்.

மன்மதனைப் பழிக்கும் சுந்தர ரூபம் கண்டு
மதி மயங்கினர் மங்கையர் காம மிகுதியால்.

வசப்படுத்த முயன்றனர் அழகால், உருவால்,
சுகரைத் தம் சாஹசத்தால், சாமர்த்தியத்தால்.

சரசம் செய்தனர், பலாத்காரமும் முயன்றனர்.
சலனம் அடையவில்லை சுகமுனிவர் சற்றும்.

தியான நிஷ்டையிலேயே மூழ்கி இருந்தார் சுகர்;
திரும்பிப் பார்க்கவில்லை விரும்பிய சுந்தரிகளை.

மரக் கட்டை போல இருந்து மயங்காது
சரசங்களைச் சமாளித்தார் சுக முனிவர்.

உலகம் உய்ய வேண்டும்!  விசாலம். K. ராமன் 

1#17c. Mithila Nagar

Sage Sukar watched with fascination the palatial buildings and their impressive gopurams, the market streets and the shops in those streets. He saw the common folks moving about doing their daily business and the learned pundits arguing on many sAstras.

He tried to enter through another gate and was stopped by the guard there. But now he did not mind being stopped thus. He just sat in the shade of a tree and was lost in meditation.

A minister saw the tejas of the young sage and took him inside to the nandavanam (garden of the king). He told some young maidens to attend to the needs of the sage. These women took care of his needs with great devotion.

One day the womenfolk from the king’s palace visited the nandavanam. They were impressed by the young sage who shone like the cool luminescence of one thousand full moons risen together.

They feel head over heels in love with him. They tried to win his love by many subtle methods known to them. They even tried to force themselves on him. But sage Sukar sat like a wooden statue and was not affected by any of their charm and cunning ways.